'சட்டத்தரணிகளே மரணம் மௌனித்து விட்டதா', 'நேற்று வித்தியா இன்று சேயா. நாளை யார்?', 'அதிகரித்துவரும் சிறுவர் துஸ்பிரயோகங்களைக் கண்டிக்கின்றோம்', 'வித்தியா சேயாவிற்கு நீதி வேண்டும்' என எழுதப்பட்ட வாசகங்களை அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர். வவுணதீவுப் பிரதேச விசேட தேவையுடையோரின் அமைப்பான 'வாழ்வகம்' அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி வவுணதீவு சந்தியிலிருந்து ஆரம்பமாகி வவுணதீவு பிரதேச செயலகம் வரை சென்று பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரனுக்கான மகஜரை கணக்காளர் கே. ஜெகதீஸ்வரனிடம் கையளித்தனர்.
|
No comments:
Post a Comment