September 26, 2015

போர்க்குற்ற விசாரணைக்கு கெலம் மெக்ரே பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்! (படங்கள் இணைப்பு)

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம், மனிதபிமானத்திற்கு எதிரான குற்றம் போன்ற பல குற்றங்களை ஐ.நா விசாரணைக்கு எடுப்பதற்கு சனல் 4 கெலம் மெக்ரே பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
 இன்று வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம், மனிதபிமானத்திற்கு எதிரான குற்றம் போன்ற பல குற்றங்களை ஐ.நா விசாரணைக்கு எடுப்பதற்கு சனல் 4 கெலம் மெக்ரே அவர்கள் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
ஊடகத்துறையால் தான் ஏனையவர்களுடன் சேர்ந்து பல ஆதாரங்களை திரட்டி விசாரணைக்கு கொடுப்பதற்கு முடிந்துள்ளது.
இதே மாதிரியாக எங்களுடைய நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் பல விடயங்களை அரசியல் மட்டுமன்றி, விஞ்ஞானம், கலை, கலாசாரம், மற்றும் நல்ல விடயங்களை உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்கும் வேண்டாதவற்றை வெளிக் கொணர்வதற்கும் ஊடகத்துறையே உதவியுள்ளது.
இன்று அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்து அவற்றை விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்து மக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்பூட்டுவதற்கும் ஊடகங்களே உதவியுள்ளன எனவும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment