சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் 1.4 மில்லியன் கையெழுத்து வரலாற்று முக்கியத்துவம் மிக்கதென ஜெனீவாவில் தமிழீழத் தாயக அரசியற் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து இயகத்தில் உலகப்பரப்பெங்கும் 1.4 மில்லியன் மக்கள் ஒப்பமிட்டிருந்த நிலையில், ஐ.நாவிடமும் அனைத்துலக நாடுகளிடமும் இவைகள் ஒப்படைக்கைப்பட்டுள்ளது.
இது தொடர்பில இக்கையெழுத்து இயக்கத்தில் தங்களையும் இணைத்திருந்த சிறிலங்காவின் வட மாகாணசபைப் பிரதிநிதிதகளான சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி எழிலன் ஆகியோர் மில்லியன் மக்களின் இக்கோரிக்கையினை அனைத்துலக சமூகம் நிராகரித்துவிட முடியாது என தெரிவித்துள்ளனர்.
ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் மிக்கதொரு முனைப்பாக இக்கையெழுத்து இயக்கம் அமைந்துள்ளதோடு, உலகின்
மனட்சாட்சியினை மில்லியன் மக்களின் கையொப்பங்கள் தட்டியெழுப்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மனட்சாட்சியினை மில்லியன் மக்களின் கையொப்பங்கள் தட்டியெழுப்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment