திருகோணமலை பள்ளிக்குடியிருப்பு கீராண்டகுளத்தை புனரமைத்துத் தருமாறு அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மூதூர் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பள்ளிக்குடியிருப்பு கீராண்டகுளம் நீண்டகாலமாக
செப்பனிடப்படாமல் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது என கஜமுகன் விவசாய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சரவணமுத்து முதல்வன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்தக் குளம் தோப்பூர் கமநல சேவைகள் திணைக்களத்துக்கு உட்பட்டதாகும். சுமார் 650 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீரைத் தேக்கி வைக்கக் கூடிய இந்தக் குளம் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று காணப்படுவதுடன் நீரை தேக்கி வைக்க முடியாதவாறு மதகு வான்கதவுகள் குளக்கட்டு என்பன சேதமடைந்தும் காணப்படுகின்றன.
இக்குளத்து நீரை நம்பி சுமார் 700 குடும்பங்கள் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பாக தாம் பல்வேறு தரப்பினருக்கும் அறிவித்துள்ள போதும் இதுவரை எவ்வித பயனும் கிடைக்கவில்லை. எனவே கவனிப்பாரற்றுக் கைவிடப்பட்டுக் கிடக்கும் கீராண்டகுளத்தை திருத்தியமைத்து தமது ஜீவனோபாய தொழிலை மேற்கொள்ள உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
No comments:
Post a Comment