மத்தள சர்வதேச விமான நிலையத்தை நெற் களஞ்சியமாக பயன்படுத்துவது தேசிய அநீதி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மத்தள விமான நிலையத்தை நெற் களஞ்சியமாக பயன்படுத்தபடுமானால், நாடாளுமன்றம் ஒன்று கூடாத நாட்களில் நாடாளுமன்றத்தையும் நெல்லை களஞ்சியப்படுத்த பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் வீரவன்ஸ கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க,
நாட்டில் நெல் விவசாயத்தை கட்டியெழுப்ப தேவையான திட்டங்களை வகுக்க தற்போதைய அரசாங்கம் தயாராக இருக்கின்றது. இதற்காக அரசாங்கம் தனியான அதிகார சபை ஒன்றை ஸ்தாபிக்க உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மத்தள விமான நிலையம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை பெற்றுத் தர தயாராக இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment