September 30, 2015

நாம் போர்க்­குற்­றத்­தினை நிரூ­பிப்­ப­தற்­கா­க­ எம்மால் முடிந்தளவு பங்­க­ளிப்பை செய்கின்றோம் -துரை­ரா­ஜ­சிங்கம்!

கடந்தகாலங்களில் இடம்பெற்ற போர்க்­குற்­றத்­தினை நிரூ­பிப்­ப­தற்­கான எங்­க­ளு­டைய பங்­க­ளிப்­பு­களைச் செய்து கொண்­டி­ருக்­கின்ற அதே­வேளை சிறந்­த­வொரு அர­சியல் தீர்­வினைப் பெறு­வ­தற்­காகவும் நாம் உழைத்துக் கொண்­டி­ருக்­கின்றோம் என கிழக்கு மாகாண விவ­சாய அமைச்சர் கிருஸ்­ண­பிள்ளை துரை­ரா­ஜ­சிங்கம் தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்பு வந்­தா­று­மூ­லையில் நடை­பெற்ற மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைக் கௌர­விக்கும் நிகழ்வில் அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே­இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில் தமிழ் மக்கள் தமித் தேசி­யத்தின் பாலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பால் கொண்­டி­ருந்த பற்­றி­னாலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மையின் மேல் வைத்­தி­ருந்த நம்­பிக்­கையின் கார­ண­மா­கவுமே பெரு­வா­ரி­யான வாக்­குகள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்குப் போடப்­பட்­டன.
அதன் கார­ண­மாக நாம் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மூன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைப் பெற்­றி­ருக்­கின்றோம். தற்­போது இந்தப் பாரா­ளு­மன்றப் பலத்தை வைத்துக் கொண்டு ஜெனீ­வாவில் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்ற இந்த இலங்­கையின் போர்க் குற்றம் தொடர்­பான விட­யங்­களை முன்­ந­கர்த்திச் செல்ல வேண்­டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு இருக்­கின்­றது. இலங்­கையின் போர் முடிந்­ததன் பிற்­பாடு இலங்­கையில் போர்க்­குற்ற விசா­ரணை நடாத்­தப்­பட வேண்டும் என்று ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் செய­லாளர் பான் கீ மூன் அவர்கள் தெரி­வித்­ததை அன்­றைய ஜனா­தி­பதி மறுத்­ததில் இருந்து இலங்­கையில் தமி­ழர்­களின் வாழ்வு இருள் சூழ்ந்­த­தாகத் தான் இருந்­தது.
மேலும் அந்த நிலையில் எமது நிலையை ஐக்­கிய நாடுகள் சபைக்கோ அல்­லது ஐக்­கிய நாடுகள் சபையின் வேறு அமைப்­பு­க­ளுக்கோ கொண்டு செல்ல முடி­யாத நிலை இருந்­தது. இந்த நேரத்தில் தான் எமது மதி­நுட்­ப­மான குழு அமெ­ரிக்கா மற்றும் பல நாடு­களை அனு­கிய போது அங்கு அனைத்­தி­னாலும் ஒரு விடயம் கூறப்­பட்­டது ஆட்­சியில் இருக்கும் ஒருவர் மீது நட­வ­டிக்கை எடுப்­பது ஒரு நாட்டின் மீது நட­வ­டிக்கை எடுப்­பது போன்­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது. அத்­துடன் போர்க்­குற்றம் தொடர்­பாக ஒரு நப­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கே சர்­வதேச சட்­டத்தில் இடம் இருக்­கின்­றது. ஆனால் ஒரு நாட்­டிற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பது தொடர்­பான ஏற்­பா­டுகள் கிடை­யாது என்று தெரி­வித்­தன.
எனினும் அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரிய முயற்­சியால் சர்­வ­தேச நாடுகள் எம்­முடன் கைகோர்த்து இதனை வேறு ஒரு முறையில் மேற்­கொண்­டுள்­ளன. அந்த வகையில் ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் அமை­யத்தில் அமெ­ரிக்­கா­வினால் கொண்டு வரப்­பட்ட தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் எமது விடயம் கையா­ளப்­ப­டு­கின்­றது. அதனைத் தொடர்ந்து தான் இலங்­கையில் போர்க்­குற்றம் தொடர்­பான விட­யங்கள் மெல்ல மெல்ல எழுந்­தன என்­பதை நாம் மறந்து விடக் கூடாது.
2013, 2014, 2015ஆம் ஆண்­டு­களில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு பல வகை­களில் உத­விய புலம்­பெயர் அமைப்­பு­களும் தொடர்ச்­சி­யாக எடுத்துக் கொண்ட பல்­வேறு முயற்­சி­களின் கார­ண­மாகத் தான் இலங்கை அர­சுக்கு எதி­ரான போர்க்­குற்­றமும் அத­னூ­டான விசா­ர­ணை­களும் இடம்­பெ­று­கின்­றன.

No comments:

Post a Comment