September 2, 2015

மெல்பேணில் நடாத்தப்படும் தியாகி தீலீபனின் 28ம்ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்!

வணக்கம்!
அவுஸ்திரேலியா மெல்பேர்னில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26ம் திகதிசனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு, St Jude's Primary School Hall,
51 George St, Scoresby இல் தியாகி தீலீபனின் 28ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மெல்பேர்ன்வாழ் அனைத்து உறவுகளையும் வருகை தந்து பங்கெடுத்துக் கொள்ளுமாறு விக்ரோறியா தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் (Jpg & Audio Adv (MP3) இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. தயவுகூர்ந்து இவ்வறிவித்தலை உங்கள் ஊடகங்களி னுாடாக வெளியீட்டு தகுந்த ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். அத்துடன் உங்களிற்கு தெரிந்த தமிழ் உறவுகளிற்கும் தெரியப் படுத்துமாறும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
நன்றி.
Vanakkam & Hello Everyone !!!

Victoria Tamils coordinating committee's Cultural events committee are organising a 28th death Anniversary Remembrance Day function to commemorating the sacrifice of Martyr Thileepan (a political leader of the LTTE). who began a fast for the freedom of the Tamil people in 1987. He put forward five requests to the government of India which had sent its military to the Tamil homeland. His requests included the removal of the Sri Lankan military from schools and halting of new Sinhala settlements. However the government of India remained insensitive to the requests of Martyr Thileepan. He attained martyrdom on the 12th day of his fast on 26th September 1987.
Tamil people, who lives all over the world remembers the 28th Anniversary of "Thiyaka Theepam" Thileepan, who fast to death in 1987 from 15th of Sept. to 26th of Sept. In these memorial events, Tamil people participated in the commemorations in large numbers. So, It's our turn to commemorating the sacrifice of Martyr Thileepan. Come along with your whole family and bring your garden flowers for Homage. Especially, It will be good for the younger kids to listen & see the historical sacrifice of this Young Tamil leader.

Details of the THIYAGI THILEEPAN's Melbourne Memorial Event are:

Melbourne
Date: Saturday 26th September 2015
Time: 6.00pm
Venue: St Jude's Primary School Hall, 53 George St, Scoresby, Victoria 3179.

Please forward & circulate this email to as many of your friends and families as possible. Please find attached Event Notices (Melbourne) for more Informations.
Thank you all.

" THIYAKA THEEPAM" Memorial Events committee

உன் மறைவு எமக்கு உண்மையான
உண்மையைப் பிறப்பித்துத் தந்து போயிருக்கிறது
உனது மறைவினால் ஓர் புதுயுகம்
ஒளி பெற்றிருக்கிறது
உன் எண்ணத்தில் உதித்த தமிழீழம் - யாராலும்
தடுக்க முடியாத ஓர் பிரசவம்

Remembering Lt.Col Thileepan
You passed away in full view of thousands of tear filled Tamil eyes,
fasting in steadfast defiance of violence and oppression
for twelve whole days you consumed neither food nor water,
until your last breath you fought to recapture human liberty
through self sacrifice.
Today we remember your sacrifice,
we remember the strength it took and the pain we felt.
Your demands were for freedom,
a freedom we still do not have.
With you in our hearts our fight for freedom continues.
---------- Forwarded message ----------
From: Aanantharajah Vasanthan
Date: 2015-08-30 21:09 GMT+10:00
Subject: Thileepan Memorial Event Flyer + Audio Adv_தியாகி திலீபனின் 28ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு விபரங்கள்

தியாகி திலீபனின் 28ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு
தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 28ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு எதிர்வரும் 26ஆம் நாள் சனிக்கிழமை மெல்பேணில் இடம்பெறவுள்ளது.
ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப்போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான். அடிப்படையான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் மேற்கொண்ட பயணம் எமது விடுதலைப்போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது.
பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ஆண்டுதோறும் நடைபெறுவதைப் போல் இம்முறையும் தியாகதீப கலைமாலை என்ற தாயகப்பாடல்களின் இசைநிகழ்வும் இடம்பெறும்.
இடம்: St Jude's Primary School, 53 George St, Scoresby, VIC.
காலம்: 26/09/2015 சனிக்கிழமை மாலை 6 மணி.
தொடர்பு: 0433002619, 0433002621
நிகழ்வு ஏற்பாட்டுக்குழு,
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - விக்ரோறியா

No comments:

Post a Comment