17,08,2015 நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று வாக்களிப்பு நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகின்றன.
இதன்படி நாடுமுழுவதும் உள்ள 12 ஆயிரத்து 314 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் இன்று விநியேகிக்கப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் இன்று காலை யாழ். தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்திலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டன.
இதேபோன்று ஏனைய பகுதிகளிலும் வாக்குப்பெட்டி எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


No comments:
Post a Comment