.தேர்தலில் வாக்களிக்க இலஞ்சமாக பொருட்களை விநியோகிக்க முற்பட்ட பொதுஜன ஜக்கிய முன்னணி வேட்பாளர் அங்கயன் அகப்பட்டுள்ளார்.வலிகாமம் அளவெட்டி பகுதியினில் பொருள்
விநியோகத்தினில் ஈடுபட்டிருந்த வேளை கையும் மெய்யுமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் பிடிக்கப்பட்டுள்ளார்.அதே போன்று வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து மக்கள் தங்கியுள்ள பகுதிகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்களை தேடும் முயற்சி ஆரம்பமாகியுள்ளது.
இதனிடையே தேர்தலுக்கு முன்னர் பொருட்களை விநியோகித்தல், உணவு விநியோகித்தல், அச்சுறுத்தல் மற்றும் பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் தொடர்பில் தேர்தலுக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
சில பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முதலில் பொலிஸில் முறைப்பாடு செய்யவேண்டும் என்றும் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment