திருகோணமலை கிண்ணியாப் பிரதேசத்தில் மனைவியை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய கணவனை கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறாம் கட்டை, கிண்ணியாப் பகுதியில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பு ஏற்பட்டு ஆத்திரத்தில் மனைவியை கணவன் கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கணவனை பொலிஸார் கைது செய்து அன்றைய தினம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment