தமிழ் மக்களை படுகொலை செய்த முன்னாள் ஜனாதிபதி, தமிழ் மக்களை ஏமாற்றிய இன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராகவே குருநாகல் மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றைய தினம் குருநாகல் மாட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இந்தநிலையில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆட்சிக்காலத்தில் பல தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். எனவே தமிழ்மக்கள் சார்பில் எமது எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.
இதேவேளை தற்போதைய ஐனாதிபதியும், பிரதமரும் தமிழ் மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புக்களை சிதைத்து, அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணாமல் போனவர்கள் விடயம், மீள்குடியேற்றம் ஆகிவற்றில் எம்மை ஏமாற்றியுள்ளார்கள்.
எனவே மூவருக்கும் தமிழ் மக்கள் சார்பில் எதிர்ப்பினை தெரிவிக்கவே தேர்தலை எதிர்கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment