July 14, 2015

சத்தம் இன்றிய யுத்தமாக போதைப்பொருள் யுத்தத்தம் இடம்பெற்று வருகின்றது.!

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களை விடவும் தற்போது மதுப் பாவனை அதிகரித்துள்ளதாக புனித சவேராயர் குருத்துவ கல்லூரியின் ஒழுக்கவியல் விரிவுரையாளர் ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள தேசிய புகைத்தல் ஒழிப்பு மாதத்தையொட்டி யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கலந்தரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 2002ஆம் ஆண்டு யாழில் மது பாவனை ஒரு மில்லியன் லீற்றராகவும் 2012ஆம் ஆண்டு இப் பாவனை 2 மில்லியன் லீற்றராகவும் காணப்பட்டது. ஆனால் 2013ற்கும் 2015ற்கும் இடையில் மது பாவனையின் அளவு 4.5லீற்றராக அதிகரித்துள்ளது.
குறிப்பாக இங்கு மதுபாவனைகள் அதிகரிப்பதற்கு அதிகாரிகளும் ஒரு காரணமே. எனேனில் மதுபானசாலைகளுக்கான புதிய அனுமதி வழங்கலானது தற்போது அதிகரித்துள்ளது. இதன்படி 2007ஆம் ஆண்டு 29 வீதமாக காணப்பட்டிருந்த மதுபானசாலைகள் 2015 ஆம் ஆண்டு 81 வீதமாக அதிகரித்துள்ளது.
மேலும் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் யுத்தம் என்ற போர்வையில் பல்வேறு விதமாக அழிக்கப்பட்டனர். ஆனால் 2009ஆண்டுடன் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் சத்தம் இன்றிய யுத்தமாக போதைப்பொருள் யுத்தத்தம் இடம்பெற்று வருகின்றது. எனவே இந்த யுத்தத்தினால் பலர் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றனர். என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment