July 14, 2015

வன்னியில் 18 அரசியல் கட்சிகளும் 10 சுயேட்சைக் குழுக்களும் போட்டி!

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் 18 அரசியல் கட்சிகளும் 10 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
(13.07.15) நண்பகலுடன் நிறைவுக்கு வந்த வேட்புமனுத் தாக்கலின் போது வன்னித் தேர்தல் தொகுதிக்குரிய 6 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 19 அரசியல் கட்சிகளும் 11 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தன.
இதில் நவ சிகள உறுமய கட்சி மற்றும் சுயேட்சைக்குழு ஒன்றினுடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 18 கட்சிகளும் 10 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடவுள்ளன.
இதன் படி ஜனசெத பெரமுன, மக்கள் விடுதலை முன்னனி, முன்னிலை சோசலிசக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, சிறிலங்கா மக்கள் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி,தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி, பிரஜைகள் முன்னனி, ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழவர் ஜனநாயக முன்னனி, ஐக்கிய மக்கள் கட்சி, ஜனநாயக ஐக்கிய முன்னனி, ஐக்கிய சமாதான முன்னணிஇ மௌபீப ஜனதா பட்சய ஆகிய கட்சிகளும் 10 சுயேட்சைகளும் போட்டியிடுகின்றன.

No comments:

Post a Comment