July 17, 2015

சுகாதாரத்தொண்டர்கள் தெல்லிப்பழையில் போராட்டம்!

தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிய ஊழியர்கள் பணி நிறுத்தப்பட்ட நிலையில் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டார்கள்.

குடந்த ஒரு வருடத்திற்க்கு மேலாக குறிப்பிட்ட ஊழியாகள் முப்பத்தைந்து பேர் சிற்றூழியாகளாக ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றி வந்த நிலையில்p நேற்ற வியாழக்கிழமை எந்த வகையான முன்னறிவித்தலும் இன்றி வேலையில் இருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளளார்கள்.
இவர்களுடைய பணிப்பகிஸ்கரிப்பைத் தொடர்ந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்த தமிழ்தேசிய கூட்டமைபின் வட மாகாண சபை உறுப்பினாகளான தர்மலிங்கம் சித்தார்தன் பா.கஜதீபன் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் அங்கஜன் ஆகியவர்கள் தாம் இது சம்பந்தமான நடவடிக்கைகளை எடுப்பதாக ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை வட மாகாண சுகாதார அமைச்சர் தொலைபேசி மூலம் பாதிக்கப்பட்ட ஊழியாகளுடன் கதைத்தபோதிலும் ஆக்க பூர்வமான பதில் எதனையும் வழங்க முன்வராத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
unnamed (21)
unnamed (22)
unnamed (23)
unnamed (24)

No comments:

Post a Comment