தாயகத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணிலே ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலை தொடர்ந்து 6 வது அகவையை கடந்து நிற்கும் இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் தேசத்திலும், தாயகத்திலும் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற்று வளர்வதற்கு தமிழ் ஊடகங்களின் பொறுப்புணர்வும் நம்பகத்தன்மையும் ஊடகதர்மமுமே மிக முக்கியமான காரணிகளாகும்.
முதலாவதாக தமிழ்த் தேசிய விடுதலைப் பாதையில் கடந்த ஆண்டுகளாக தம்மால் இயன்ற வகையில் தமது பங்களிப்பை வழங்கி தமிழ்த் தேசிய விடுதலைக்கு உந்துசக்தியாக விளங்கிய அனைத்து ஊடகங்களுக்கும் எமது பாராட்டுக்களை தெரிவிக்கின்றோம் .
தமிழ் ஊடகங்களாக வானொலி> தொலைக்காட்சி> இணையத்தளங்கள் என பல்வேறு பட்ட வடிவங்களில் ஊடகங்கள் இன்றைய நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் இயங்குகின்றன. ஊடகங்கள் தமது ஊடக தர்மத்தை பேணும் வகையில் நடுநிலைமையை வகிப்பது அவசியமென்பது யாவரும் அறிந்தவிடையம் . இருப்பினும் குறிப்பாக 2009 ஆண்டுக்கு பின்னர் சில ஊடகங்கள் ஒரு பக்க சார்பாக நடந்துகொள்வது யாராலும் மறுக்க முடியாதது . மறுபக்கம் ஒருசில ஊடகங்கள் நடுநிலைமை வகிப்பது போன்று தமிழ்த் தேசிய விடுதலையை சிதைக்கும் முயற்சிக்கு தளம் கொடுப்பதையும் தமிழ்த் தேசிய இருப்புக்கான கருத்துக்களை புறக்கணிக்கும் வகையிலும் நடந்துகொள்கின்றது எமக்கு மனவருத்தத்தை தருகின்றது . அனைவரின் கருத்துக்களையும் பிரசுரிக்கும் வகையில் நடந்துகொள்ளாமல் ஒரு தரப்பு வெளியிடும் ஊடக அறிக்கையை பிரசுரிப்பதும் ஏனைய அமைப்புகள் வெளியிடும் அறிக்கைகளை நிராகரிப்பதும் மழுங்கடிப்பதும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாததும் ஊடக தர்மத்துக்கு விரோதமான செயற்பாடாகவும் பார்க்கப்பட வேண்டும் .
அந்தவகையில் இன்றைய முக்கியமான சவால் மிகுந்த காலகட்டத்தில் தமிழ் ஊடகங்கள் தமிழ் தேசியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் சம நேரத்தில் ஊடக தர்மத்தை பேணும் வகையிலும் நடந்து கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது. உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கி மக்களை பிழையாக வழிநடத்தி அரசியல் பிழைப்பு நடத்த முயற்சித்துவரும் செயற்பாடுகளை ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் கையாளவேண்டும் என்பதே எமது அவா. சம நேரத்தில் ஊடகங்களில் பொய்யான மற்றும் உண்மைக்கு புறம்பானதுமான தகவல்களை வழங்கி ஊடக தர்மத்தையும் மக்கள் ஊடகங்கள் மீது வைத்துள்ள நம்பகத்தன்மையினையும் மாசுபடுத்த மிகவும் கீழ்த்தரமாக முயற்சிப்பது மிகவும் கண்டிக்கத்தக்க விடையமாகும் என்பதையும் தெரிவிக்கின்றோம் .
நாடுகள்வாரியக தமிழ் மக்களின் வேணவாக எமது சுதந்திரத்தை நோக்கிய பாதையை தெளிவாகப் பிரதிபலிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டு வருகின்றன. இந்த வகையில் எதிர்வரும் காலங்களில் அனைத்து ஊடகங்களும் விடுதலையை வென்றெடுப்பதுக்கான கருத்துச் சமர் தளத்தை இதயசுத்தியுடன் உருவாக்கி ஆதரவு கொடுப்பார்களென நம்புகின்றோம் . அதேவேளையில் எமது மக்களும் விழிப்பாக இருந்து தமது வேணவை சரியாக பிரதிபலிக்கும் ஊடகங்களை ஆதரிப்பது காலத்தின் தேவையாகும்.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை
ஊடகப் பிரிவு
குருசாமி குருபரன்;: 0041 79 193 86 69
தேவா சபாபதி: 001 (647) 875 0524

No comments:
Post a Comment