லண்டனில்
சில இடங்களில் தமிழர்களை குறிவைத்து மர்மமான கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று
வருகிறது. இவர்கள் குறிப்பாக பெண்களையே குறிவைக்கிறார்கள்.
நகைகள் அணிந்துகொண்டு வரும் பெண்களை வீதியில் கண்டால் , தீடீரென வெள்ளை இனப் பெண் ஒருவர் வந்து கையில் ஒரு கடதாசியைக் காட்டி , அதில் உள்ள முகவரி தெரியுமா என்று கேட்ப்பார்.
அது பெரும்பாலும் அந்த ஏரியாவில் அல்லது மிக மிக அண்மையில் உள்ள , ஒரு இடமாக இருக்கும். எனவே 80 சதவீதமானவர்கள் அந்த இடம் எங்கே இருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள்.
உடனே அந்த வெள்ளையினப் பெண் ஆனந்தமடைந்து , அவரை கட்டிப்பிடிப்பார். அப்போது தான் அந்த விசித்திரக் கொள்ளை நிகழ்கிறது. எப்படி அறுக்கிறார்கள் என்று தெரியாமலே கழுத்தில் உள்ள நகையை அறுத்து எடுத்துவிடுகிறார்கள்.
இதுபோல அட்ரஸ் சொல்லப்போய் பின்னர் கட்டிப் பிடித்து , நகையை தொலைத்துவிட்டு அலைபவர்கள் பலர். இதில் ஒரு ஆணும் சிக்கியுள்ளார். வெள்ளை இனப் பெண் தன்னை கட்டிப் பிடிப்பதாக அவர் நினைத்து பரமானந்தம் அடைந்து. கடைசியில் சிங்கப்பூர் சங்கிலியை தொலைத்துவிட்டாராம்.
No comments:
Post a Comment