அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தின போது திருட்டைத் தடுக்க முற்பட்ட பெண் ஒருவர் திருடர்களினால் தாக்கப்பட்டு அவரது சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிய சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு
இடம்பெற்றுள்ளது. அளவெட்டிப பகுதியில் உள்ள உயர் அதிகாரி ஒருவரின் வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டுக்காரர்கள் விழித்து மின்குமிழ்களை ஒளிரவிட்டு சத்தமிட்ட நிலையில் தப்பி ஒடியுள்ளார்கள்.
அங்கிருந்து தப்பிஓடிய திருடர்கள் இவர்களின் வீட்டுக்கு சற்றுத் தள்ளி உள்ள மற்றொரு வீட்டுக்குச் சென்று படுக்கையில் இருந்த பெண் ஒருவரின் சங்கிலியை திருடமுயன்றுள்ளார்கள். நித்திரையில் இருந்து விழித்துக்கொண்ட பெண் சங்கிலியை அறுக்கவிடாது இறுகப்பிடித்து கொண்டு சத்தமிட அவரை தாக்கிவிட்டு சங்கிலியை அறுக்க முற்பட்டுள்ளார்கள்.
குறிப்பிட்ட பெண் சங்கிலியைவிடாது இறுகப் பிடித்தமையால் சங்கிலியின் ஒரு துண்டு அறுக்கப்பட்ட நிலையில் அதை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளார்கள். இது சம்பந்தமாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment