இலங்கை அரசியல் பரப்பில் இன்று உதயமாகும் தமிழ்
முற்போக்கு கூட்டணி, காலத்தின் பணிப்பை பூர்த்தி செய்து நம்நாட்டு அரசியல்
பரப்பில் புதிய வரலாறு படைக்கும் என்று நான் திடமாக நம்புகின்றேன் என மனோ
கணேசன் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அங்குரார்ப்பண நிகழ்வுடன் நடைபெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சி பிரதிநிதிகள் மத்தியில் கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிவுற்றதையடுத்து இன்று கொழும்பில் சம்பந்தப்பட்ட மூன்று கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், வி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் தமது கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளின் மூலம் உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து ஊடக மாநாட்டில் உரையாற்றிய மானோ கணேசன் கூறியதாவது,
நாம் பிரதிநிதித்துவம் செய்யும் மாவட்டங்கள் எமது கூட்டணி மத்திய மாகாணத்தின் நுவரெலியா, கண்டி, மாத்தளை, மேல்மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, ஊவா மாகாணத்தின் பதுளை, சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை, வடமேல் மாகாணத்தின் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பாக செயற்படும். இந்த அனைத்து மாவட்டங்களிலும் நமது கூட்டணி கட்சிகளின் பிரதிநிதித்துவம் இல்லாத இடங்களில் நமது அரசியல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும்.
எமது மக்களின் ஜனத்தொகை
இலங்கை நாட்டிலே முப்பத்தியொரு இலட்சத்து, பதின்மூன்றாயிரம் (3,113,247) தமிழர்கள் வாழ்கிறார்கள். இதில் வடக்கு, கிழக்கில் பதினாறு இலட்சத்து பதினொன்றாயிரம் (1,611,036) தமிழர்கள் வாழ்கிறார்கள். வடக்கு, கிழக்கிற்கு வெளியில் பதினைந்து இலட்சத்து இரண்டாயிரம் (1,502,211) த

No comments:
Post a Comment