யாழ்ப்பாணம் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவத்துடன்
நேரடியாக தொடர்புடையவர்கள் மற்றும் தாக்குதல் சம்பவத்தை வழிநடத்தியவர்கள்
என குற்றம் சாட்டப்பட்ட 43 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
நீடிக்கப்பட்டுள்ளது.
43 சந்தேகநபரும் இன்று யாழ்.நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 12 ம் திகதி வரையில் விளக்கமறியலை
நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 20 ம் திகதி யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொட்புடைய 129 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சந்தேகநபர்களில் 47 பேர் கடந்த 1 ம் திகதி மன்றில் ஆஐர் செய்யப்பட்டு இருவருக்கு மட்டும் பிணை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 43 சந்தேகநபர்கள் இன்றையதினம் நீதிமன்றில் ஆஐர் செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களில் மாணவர்களாக உள்ளவர்கள் சார்பில் சட்டத்தரணி கே.சயந்தன் மன்றில் ஆஐராகியிருந்தார். அத்துடன் புத்தளத்திலிருந்து சில சட்டத்தரணிகள் மற்றய சந்தேகநபர்கள் சார்பில் ஆஐர் ஆகியிருந்தனர்.
யாழ்.சட்டத்தரணிகள் சந்தேகநபர்களுக்கு எதிராக மன்றில் இன்று ஆஐராகியிருந்தனர்.
இன்றைய தினம் எந்தவொரு சந்தேகநபருக்கும் பிணை வழங்கப்படாததுடன் 12ம் திகதி வரையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேக நபர்களில் சிலர் கைகள் முறிந்த நிலையில் காயங்களுடன் மன்றுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment