பதுளையிலிருந்து கொழும்பு சென்ற
சரக்கு ரயிலும் நாவலப்பிட்டியிலிருந்து ஹப்புத்தளை நோக்கி சென்ற சரக்கு
ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வட்டகொடை புகையிரத நிலையத்தில் வைத்து
இவ்விபத்து இன்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வட்டகொடை புகையிரத
பொறுப்பதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இரு புகையிரதத்தின் சாரதிகள் புகையிரதத்திலிருந்து பாய்ந்து தங்களின் உயிர்களை காப்பாற்றிக் கொண்டுள்ளனர்.
இரு புகையிரதத்திலும் பயணித்த சிலர் சிறுகாயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வட்டகொடை புகையிரத பொறுப்பதிகாரிகளின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment