September 1, 2016

கொழும்பு வந்தவுடன் ரணிலுடன் பேச்சு நடத்தினார் பான் கீ மூன்!

மூன்று நாள் பயணமாக நேற்றிரவு இலங்கை வந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான்கி மூன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து மனித உரிமைகள் தொடர்பான முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.


 
இதன்போது, இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் பிரதமர் பான்கி மூன்க்கு எடுத்துரைத்ததாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறை படுத்துவற்கு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பில் ஐ. நா செயலாளர் நாயகம் பிரதமரிடம் கேட்டறிந்து கொண்டதாகவும் பிரதமர் அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின் போது திருமதி பான் கி மூன் மற்றும் திருமதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் உட்பட உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நேற்று மாலை 7.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இரவு 8 மணியளவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுக்களை நடத்தினார்.



No comments:

Post a Comment