September 1, 2016

இராணுவ நினைவுச்சின்னங்களை அகற்ற விடமாட்டேன்! - மைத்திரி பிடிவாதம்!

இராணுவ நினைவுச்சின்னங்களை அகற்ற தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், அபிவிருத்தி செயற்பாடுகளின் போது இராணுவ நினைவுச்சின்னங்களை முற்றாக அகற்றாமல் அவற்றை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


 
குருநாகல் - கிரிகால , மீக்காஹெல மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குருநாகல் - தம்புள்ளை வீதி புனர் நிர்மாணத்தின் போது தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ள இராணுவ நினைவுச்சின்னங்கள் மிகவும் அழகாகவும் சிறந்த முறையிலும் அதே இடத்தில் நிர்மாணிக்கப்படவேண்டும் என பாதுகாப்பு செயலாளருக்கும் இராணுவத்திற்கும் ஆலோசனை வழங்கியுள்ளேன்.

இராணுவ நினைவுச்சின்னங்கள் அரசாங்கத்தினால் அகற்றப்படுகின்றதாக பொய்ப்பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன, பொய்யான கருத்துக்களினால் பொது மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் எனவும் இவற்றை கடுமையாக கண்டிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

No comments:

Post a Comment