September 1, 2016

வெள்ளை வான் பாணியில் பொலிசாரால் கடத்தப்பட்ட முன்னாள் போராளி: தாயார் கண்ணீர் கதறல் !

கிளிநொச்சியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர், வெள்ளைவான் கடத்தல் பாணியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி தொண்டைமான் பகுதியைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் என்ற 26 வயதுடைய முன்னாள் போராளியே வெள்ளைவானில் வந்தவர்களால் அடித்து, கைவிலங்கிட்டு கடத்திச் செல்லப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்தார்.

 
இது குறித்து பொலிசாரிடம் கேட்டபோது கிளிநொச்சி பொலிசார் தமக்கு எதுவும் தெரியாது என கூறிய நிலையில், களவுச் சம்பவமொன்று தொடர்பில் தாமே கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொலிஸாரால் தெரிவிக்கப்படுகின்ற கைது விவகாரம் தொடர்பில் தனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என கூறிய நிசாந்தனின் தாயார், இதுவரை தனது மகனை தனக்கு காட்டவில்லை எனவும் கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment