June 13, 2015

கிளிநொச்சியில் காவற்துறையின் அனுசரணையுடன் அரங்கேறும் அடாவடிகள்

கிளிநொச்சியில் காவல்துறையினரின்  அனுசரணையுடன் பல்வேறு சட்டவிரோத சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.கடந்த 5ம் திகதி மாலை 4 மணியளவில் கிளிநொச்சி விநாயகபுரம் கிராமத்தில் இல.99 விநாயகபுரம் கிளிநொச்சி என்ற முகவரியை சேர்ந்த சுதா குகானந்தினி என்ற கணவனை இழந்த பெண்ணின்

வீட்டினுள் 251-2304 என்ற இலக்க கையேஸ் வாகனத்தில் வந்த ரொசான், கல்விளான், விஜயன், ரஞ்சித், அன்றூ என்பவர்களும் இன்னும் சிலரும் புகுந்து கதவுகளை உடைத்து அச்சுறுத்தி உள்ளனர். அத்துடன் அங்கு நின்ற மேற்படி பெண்ணின் பெறாமகனுடைய NP BAQ 5298 என்ற இலக்கமுடைய மோட்டார் சைக்கிளை கடத்திச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அயலவர்கள், விநாயகபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் போன்றோர் சாட்சியாக உள்ளனர்.
எனினும் இது தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட குகானந்தினி முறைப்பாடு செய்யச் சென்ற பொழுது காவற்துறையினர் இந்த முறைப்பாடை  ஏற்க மறுத்துள்ளனர்.
ஆனால் கடத்திச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் காவல் துறையினரிடம் உள்ளது. இதேவேளை இந்த விடயம் தொடர்பாக மேற்படி பாதிக்கப்பட்ட பெண் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடமும் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து 0770427405, 0770634754 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் இருந்து பாதிக்கப்பட்ட சுதா குகானந்தினிக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சியில் காவற்துறையினர் சிலர் சமூகவிரோதக்கும்பல்களுக்கு முழு ஆசீர்வாதம் வழங்கிவருவதாகவும் இதில் தயாசிறீ என்ற பெயருடைய காவல் அதிகாரியும்  இன்னும் மூன்று பேரும் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்துள்ள போதும் அதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment