கடந்தகாலங்களினில் வடக்கு-கிழக்கு பகுதிகளினில் கொல்லப்பட்ட காணாமல் போன
ஊடகவியலாளர்கள்இஊடகப்பணியாளர்கள் தொடர்பினில் முன்னெடுக்கப்படும்
விசாரணைகள் சர்வதேச ஊடக அமைநப்புக்களின்
மேற்பார்வையினில் மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ்.ஊடக அமையம் ஜனாதிபதியை கோரியுள்ளது.இது தொடர்பினில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் ஊடக செய்திக்குறிப்பாக இணைக்கப்பட்டுள்ளது.
மேன்மை தங்கிய மைத்திரிபால சிறிசேன
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசு
ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பிலான பக்கச்சார்பற்ற விசாரணை
2000ம் ஆண்டின் இறுதியில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலையுடன் அரங்கேறத்தொடங்கிய தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தொடர்ந்த இருபது ஆண்டுகளினில் விட-கிழக்கினில் பலர் கொல்லப்படவும் காணாமல் போவதற்குமான பாதைகளை திறந்து விட்டிருந்தது.குறிப்பாக யாழ்.குடாநாட்டினில் ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டனர்.சிலர் காணாமல் போயிருந்தனர்.ஊடக பணியாளர்களும் கொல்லப்பட்டும் காணாமலும் போயிருந்தனர்.ஊடக நிறுவனங்கள் பல தடவைகள் தாக்கப்பட்டன.
அதே வேளை வன்னியினில் யுத்த காலப்பகுதிகளில் பல ஊடகவியலாளர்கள் அடையாளப்படுத்தல்கள் இன்றி கொல்லப்பட்டனர்.அவர்கள் ஊடகவியலாளர்கள் என்பதை அங்கீகரிக்க கூட இன்று வரை மறுக்கப்படுகின்ற கதை தொடர்கின்றது.குறிப்பாக இறுதி யுத்தத்தினில் கொல்லப்பட்ட காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் பற்றி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதுமில்லாதேயுள்ளது.
இத்தகைய சூழலினில் சட்டத்திற்கு முரணாக இடம்பெற்ற படுகொலைகள் கடத்தல்கள் தொடர்பினில் எந்தவொரு விசாரணையும் குறிப்பிடும் வகையினில் இடம்பெற்றிருக்கவில்லை.இடம்பெற்ற ஆரம்ப கட்டவிசாரணைகளுடன் அவை கிடப்பினில் போடப்பட்டும் விட்டன.
ஆனாலும் மாறி மாறி ஆட்சிக்கதிரை ஏறிய தரப்புக்கள் பலவும் பெயருக்கு விசாரணைகளை மேற்கொள்ள ஆணைக்குழுக்களை அமைப்பதும் அவ்வாணைக்குழுவின் விசாரணைகளால் தீர்வு கிடைக்குமென கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்களது சகபாடிகள் வாக்குமூலங்களையும் சாட்சியங்களையும் அளித்திருந்தனர்.அவ்விசாரணைக்குழுக்களிற்கும் அவற்றினது அறிக்கைகளிற்கும் என்ன நடந்ததென்பதை நாம் இன்று வரை அறியமுடியவில்லை.
இந்நிலையினில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பினில் விசாரணைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக தாங்கள் சக ஊடகவியலாளர் பிரகீத் தொடர்பினில் பிரஸ்தாபித்துள்ளீர்கள்.அதனை யாழ்.ஊடக அமையம் மனப்பூர்வமாக வரவேற்கின்றது.ஆனால் அது வெறுமனே பெயரளவிலான விசாரணையாகவோ கிடப்பினில் போடப்படுவதற்காகவோ இருக்க கூடாதென நாம் வேண்டுகின்றோம்.
பிரகீத் தொடர்பினில் பேசப்படும் வேளை யாழ்ப்பாணத்தினில் காணாமல் போன இராமச்சந்திரன் முதல் வன்னியின் இறுதியினில் தகவலற்றுப்போயுள்ள அனைத்து ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் தொடர்பினிலும் விசாரணைகள் தேவையென நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
அதே போன்று கொல்லப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் தொடர்பினிலும் விசாரணைகள் தேவையென வலியுறுத்துவதுடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தவும் கேட்டுக்கொள்கின்றோம்.அத்துடன் ஊடகவியலாளர்கள் கொலைகள் மற்றும் கடத்தல்களுடன் தொடர்புடைய இதே பாதுகாப்பு பொறிமுறைகளினை வைத்து நடத்தப்படும் விசாரணைகள் என்றுமே எமக்கு நம்பிக்கை தரப்போவதில்லை.ஆதலால் பக்கச்சார்பற்ற சர்வதேச ஊடக அமைப்புக்களின் மேற்பார்வையின் கீழான விசாரணைகளையே நாம் வேண்டிநிற்கின்றோம் என்பதையும் நாம் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
யாழ்.ஊடக அமையம்

No comments:
Post a Comment