யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்தியா, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக பாகிஸ்தான் செனட்சபையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தொடர்பில் இந்திய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கைகளுக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று செனட்சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியாவின் இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என செனட்சபையின் தலைவர் ராஜா மொஹ்முட் சபார் உல் ஹக் இந்த தீர்மானத்தை முன்வைத்திருந்தார்.
இந்தியாவின் இவ் மேலாதிக்க மனப்போக்கை பாகிஸ்தான் நிராகரித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய தலைமை அறிக்கைகளுக்கு எதிராக நடந்த விவாதத்தின் போது இந்தியா எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்தது என செனட்சபையின் தலைவர் ராஜா மொஹ்முட் சபார் உல் ஹக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் இந்தியா, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியதாகத் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத்தில் 2000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், இது குறித்து இந்திய பிரதமர் நரேந்தி மோடி எவ்வித அனுதாபமும் வெளியிடப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் சார்க் மற்றும் பிற சர்வதேச அமைப்புக்களை அணுகி இந்தியாவின் தலைமைத்துவத்தை பற்றி அம்பலப்படுத்த வேண்டும்.
இந்தியா பொறுப்பற்ற மாநிலம் என இதன் ஊடாக நிரூபித்துள்ளது.
சர்வதேச சமூகம் மோடியின் ஆத்திரமூட்டும் அறிக்கை தொடர்பில் கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என சையத் முசாபர் ஹுசைன் ஷா வலியுறுத்தியுள்ளார்.
இந்திய-பாக்கிஸ்தான் உறவுகள் சம நிலையில் நிறுவப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயுதப் படைகள், உள்துறை அமைச்சகம் மற்றும் இந்தியா அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சிற்கு அவர் பாராட்டியுள்ளார்.
இதேவேளை, சையத் முசாபர் ஹுசைன் ஷா பாகிஸ்தான் அமைதியான நாடு எனவும் எந்தவொரு தரப்பு மீதும் கோப்படப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தீவரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment