June 13, 2015

மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் ரவிகரனுக்கு மீண்டும் விசாரணை!

கடந்த ஆண்டு நவம்பர் 27 அன்று மாவீரர் நாளில் விளக்கேற்றி நினைவுகூர்ந்தமை தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இன்று காலை முல்லைத்தீவில் உள்ள அவரது வீட்டில் சுமார் ஒன்றரை மணிநேரமாக வாக்குமூலம் பெறப்பட்டது.
மேலிடத்து உத்தரவின் படி மேற்படி விசாரணை இடம்பெறுவதாக விசாரணை நடாத்திய காவற்துறை அலுவலர்கள் (சிவில் உடையில்) தெரிவித்தனர்.
ஏற்கனவே கடந்த 2015-05-05 அன்று ரவிகரன் அவர்கள் இதே விடயத்திற்காக விசாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment