June 13, 2015

கனடாவில் இருந்து 140000 பேர் நாடுகடத்தப்படும் அச்சுறுத்தல்!

கனடாவில் இருந்து 140000 தமிழர்கள் நாடுகடத்தப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் புதிதாக அமுலாக்கப்பட்டுள்ள குடிவரவுத் திட்டத்திற்கு அமைய இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது சபுதிய குடிவரவுச் சட்டத்துக்கு அமைய, கனடாவில் முதல்நிலை குடிகள் மற்றும் இரண்டாம் நிலை குடிகள் என்று இருவகைப்படுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.
 இவற்றில் கனடாவில் பிறந்த கனேடியர்கள் முதல் நிலை குடிகளாகவும், ஏனையவர்கள் இரண்டாம் நிலை குடிகளாகவும் பாகுபடுத்தப்படுகின்றனர்.

ஈழத் தமிழர்கள் இரண்டாம் நிலை குடிகளின் கீழ் வருகின்றனர்.

இரண்டாம் நிலை குடிகளால் வேறு நாடுகளில் குடியுரிமை கோர முடியும் என்பதோடு, அவர்களின் கனேடிய குடியுரிமையை ரத்து செய்யவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவிலேயே பிறந்த பிறநாட்டவராக இருந்தாலும், அவர்களும் இரண்டாம் நிலைகுடிகளாகவே கருதப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே அவர்கள் நாடுகடத்தப்படும் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கவிருப்பதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment