June 13, 2015

தேரர் ஒருவர் தனது காவியுடையின் மீது தீ மூட்டித் தற்கொலை!

அம்பலாங்கொட பிரதேசத்திலுள்ள விகாரையில் தேரர் ஒருவர் தனது காவியுடையின் மீது தீ மூட்டித் தற்கொலை செய்துள்ளார். 69 வயதையுடைய கொலன்னாவ சாராலங்கார எனும் பெயரையுடைய தேரரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு செயலகம் அறிவித்துள்ளது.
குறித்த பிக்கு மதுனாகல விகாரைக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வருகை தந்த ஒருவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment