கடந்த ஆண்டில் சுமார் 155 சிறைக் கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.இதில் 124 பேர் கைதிகள் எனவும், 31 பேர் சந்தேக நபர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கடந்த ஆண்டு தப்பிச் சென்ற கைதிகளில் 19 பேரையும், சந்தேக நபர்கள் 4 பேரையும் சிறைச்சாலை அதிகாரிகள் மீளவும் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, கடந்த ஆண்டில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது 51 கைதிகளும், 50 சந்தேக நபர்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு மொத்தமாக ஒரு லட்சத்து பதினாறாயிரத்து அறுநூற்று ஐம்பது பேர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டனர் என சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment