June 13, 2015

இலங்கை கைதி கோயம்பேடு சிறையில் பாதுகாப்பு அதிகாரியை தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளார்!

சென்னை கோயம்பேடு சிறையில் இருந்து இலங்கையர் ஒருவர் தப்பிச்சென்றுள்ளார்.போதைவஸ்து கடத்தல் தொடர்பில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர் புழல் சிறைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
32 வயதான கொழும்பை சேர்ந்த சுரேஸ் என்றழைக்கப்படும் நிசாந்த் என்பவரே வெள்ளிக்கிழமை அதிகாலை 12 மணியளவில் இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார்.
சிறுநீர் கழிக்கப்போவதாக கூறி அனுமதி கிடைத்தநிலையில் தமக்கு பாதுகாப்பாக வந்த காவலாளியை தாக்கிவிட்டு அவர் பஸ் ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவர் 2014ஆம் ஆண்டு போதைபொருள் கடத்தல் தொடர்பில்  கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment