மாணவி வித்தியா படுகொலை சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் 30 நாள் தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசாரிக்க ஊர்காவற்றுறை நீதிவான் நேற்று அனுமதி வழங்கிய நிலையில் அவர்கள் ஒன்பது பேரும் நேற்று மாலை 4.00 மணியளவில் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கொழும்பு கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்கு (நான்காம் மாடி) டபிள்யூ.பீ. என்.ஏ.9960 என்ற பஸ் வண்டியூடாக இவர்கள் கொண்டுசெல்லப்பட்டனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக்கொள்ளை மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா தலைமையில் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே இவர்கள் இவ்வாறு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டனர்.
பூபாலசிங்கம் இந்திரகுமார் (வயது 40),
பூபாலசிங்கம் ஜெயகுமார் (வயது 34),
பூபாலசிங்கம் தவகுமார் (வயது 32) ,
மகாலிங்கம் சஷீந்திரன்,
தில்லைநாதன் சந்திரஹாஷன்,
சிவதேவன் குஷாந்தன்,
பழனி ரூபசிங்கம் குகநாதன்,
ஜெயதரன் கோகிலன் அல்லது கண்ணன்
சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார்
ஆகிய ஒன்பது சந்தேக நபர்களுமே ஒன்பது சந்தேக நபர்களுமே நேற்று இரவோடிரவாக மன்றிலிருந்து நேராக நான்காம் மாடிக்கு மாற்றப்பட்டனர்.
No comments:
Post a Comment