முதலமைச்சரின் வாகனத் தொடரணியின் வாகனம் ஒன்று மோதியதில் சிறு குழந்தையயொன்றும் அதன் தாயாரும் படுகாயமடைந்துள்ளனர்.இவர்களுடன் மேலும் மூவரும் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு புணானையில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு - மட்டக்களப்பு வீதியால் முதலமைச்சரின் வாகனத்தொடரணி வேகமாக வந்துகொண்டிருந்த போது புணானைப் பகுதியில் ஒரு வாகனத்தின் ரயர் வெடித்துள்ளது. இதனால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தரிப்பிடத்தில் நின்றிருந்த தாய் ஒருவரையும் குழந்தையையும் மோதியது.
இதில் இதே இடத்தைச் சேர்ந்தவர்களான சாமித்தம்பி சறோசா (வயது 35) சாமித்தம்பி டிலுஸ்க்கா (6 மாதம்) ஆகிய இருவரும் இருவரும் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் அந்த வாகனத்தில் பயணித்த முதலமைச்சரின் உத்தியோகத்தர்கள் மூவரும் காயமடைந்துள்ளனர். ;

No comments:
Post a Comment