June 11, 2015

தமிழ்த் தேசியத்தின் இருப்பை தமிழ் மக்களே உறுதிப்படுத்த வேண்டும் - யேர்மனியில் நடைபெற இருக்கும் தமிழர் சமூக பொது ஆயம்!

இன்றைய காலத்தின் தேவை கருதி தமிழ்த் தேசியத்தின் இருப்பை உறுதிப்படுத்தவும் பாதுகாக்கவும் அனைத்து  தமிழ் மக்களிடமே பொறுப்பு இருகின்றதை   நாம் மீண்டும் உறுதிப்படுத்துகின்றோம் . அந்தவகையில்
சுதந்திர தமிழீழத்தை மீட்டெடுக்கும் பாதையில்  சமூகத்தின் அடிமட்ட கிராம மற்றும் பாடசாலை அமைப்புகள் தொட்டு அரசியல் அமைப்புகள் வரை ஒன்றிணைந்து தடம்பிறழாத நிலையில் நிற்க வேண்டியது தார்மீக கடமை .

இலங்கையில் வாழும் தமிழர்கள் 6ம் திருத்தச் சட்டத்தின் கீழ் தமது அரசியல் வேணவாவை சுதந்திரமாக பிரதிபலிக்க முடியாமையினால், புலத்தில் வாழும் தமிழ் குமுகாயம் அவர்களின் குரலாக இயங்க வேண்டியது  கடப்பாடாக உள்ளது .அந்தவகையில் யேர்மனியில் பரந்து விரிந்து இருக்கும்  தேசத்தில் உள்ள அனைத்து தமிழ் சமூக அமைப்புகளும்  தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி  நடைபெறவிருக்கும்  தமிழர் சமூக பொது ஆயத்தில் பங்கெடுப்பது மட்டும் அல்லாமல் தம்மை அதில் இணைத்து கொள்ளவது தேசியக் கடமையாகும் .

வெறுமனே ஒரு அமைப்பாக அல்லாமல் யேர்மனியில் உள்ள ஒட்டுமொத்த தமிழ் அமைப்புகளும்  ஒன்றிணைந்து ஒரு குரலாக , ஒரு அரசியல் சக்தியாக எமது  அரசியல் அபிலாசையை வெளிப்படுத்த வேண்டியது எமது தலையாய கடமையாக உள்ளது .

அந்தவகையில் இத்துடன் இணைக்கப்படுள்ள  தமிழர் சமூக பொது ஆயதுக்கு  ஒருமனதாக ஏற்கப்படவுள்ள மாதிரி  ஆவணத்தின் அடிப்படையில் இணைந்து கொள்ள யேர்மனியில் உள்ள அனைத்து   தமிழ் சமூக  அமைப்புகளையும்  , சங்கங்களையும்  , பாடசாலைகளையும் , விளையாட்டுக் கழகங்களையும்   வேண்டி நிற்கின்றோம் .


தமிழர் சமூக பொது ஆயம் முதல் தடவையாக கடந்த ஆண்டில் கனடா தேசத்தில் கனேடிய தமிழர் தேசிய அவையால் ஒருங்கிணைக்கப்பட்டு 60 க்கும் மேற்பட்ட அமைப்புகளின் ஒப்புதலுடன் கனேடிய தமிழர் சமூகத்தின்  ஒருமித்த கருத்தாக  தீர்மானிக்கப்பட்டது .


தமிழர் சமூக பொது ஆயம்  நடைபெறும் நாள் மிக  விரைவில் அறிவிக்கப்படும் .

தொடர்புகளுக்கு :
ஒருங்கிணைப்பு :  ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி

No comments:

Post a Comment