பிரதமர் மற்றும் நிதி அமைச்சர்களுக்கு
எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைகள் மேலும் தாமதிக்கப்படும் பட்சத்தில்,
நாடாளுமன்ற செயற்பாடுகளை புறக்கணிக்கும் சட்டத்தை அமுலாக்கவிருப்பதாக
மகிந்தவின் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்தன இந்த எச்சரிப்பை விடுத்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் வைத்து, பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைகளை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால் இதற்கு அரசாங்கம் மறுத்ததுடன், ஜீலை மாதம் இவற்றை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தினேஸ் குணவர்தன், வாசுதேவ நாணயக்கார போன்றோர், விரைவாக இது நடைமுறைக்கு வராத பட்சத்தில் ,நாடாளுமன்ற செயற்பாடுகளுக்கு ஒத்துழையாமல் செயற்பட விருப்பதாக எச்சரித்தனர்.
எதிர்வரும் 16ம் திகதி மீண்டும் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே மகிந்தவுக்கு ஆதரவாக இருந்த பலர் சிறிலங்கா அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment