June 3, 2015

தாளையடிப் பகுதியில் கணவனும் மனைவியும் கழுத்தறுத்துக் கொலை!

பளைப் பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியில் கணவன், மனைவி ஆகியோரது சடலங்கள் கழுத்தறுத்த நிலையில் அவர்களது வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கணவனின் சடலம் வீட்டுக் கிணற்றினுள் கழுத்தறுந்த நிலையிலும் மனைவியின் சடலம் வீட்டினுள் இருந்தும் மீட்கப்பட்டுள்ளது.

தாளையடியை சேர்ந்த சிவபாலன்(வயது 40) அவரது மனைவியான எஸ்.சுபாஷினி (வயது 40) ஆகியோரே அவ்வாறு சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை நேற்றைய தினம் இரவு 9.30 கணவன் மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டதாகவும் அதனை அடுத்து கணவன் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து படுகொலை செய்ததுடன் தானும் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment