June 1, 2015

சுதுமலை ஆலயத் திருவிழாவில் இரு சமூகத்தினரிடையே முறுகல் !

பொலிஸ் பாதுகாப்பால் சர்ச்சையேற்பட்டுள்ளது.ஆலய திருவிழா திருமஞ்ச வெள்ளோட்டம் பொலிஸ் பாதுகாப்புடன் நடந்த அதிர்ச்சி சம்பவம் யாழில் நடந்துள்ளது.


இந்த அதிர்ச்சி சம்பவத்தால் அந்த பகுதி இளைஞர்கள் கொந்தளித்ததால் ஏற்பட்ட பரபரப்பினால் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் ஆலயத்தில் இழுபறியும் நீடித்தது. இந்த பரபரப்பு சம்பவம் யாழ்ப்பாணம் சுதுமலை ஶ்ரீ புவனேஸ்வரி ஆலயத்தில் நடந்துள்ளது.

கடந்த 16ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்த இந்த ஆலயத்தின் திருவிழா நடந்து வருகிறது. சுதுமலை வடக்கில் வசிக்கும் ஒரு சமூகத்தினரின் 12ம் திருவிழா கடந்த புதன்கிழமை வாணவேடிக்கைகளுடன் களைகட்டி நடந்து முடிந்தது.

இந்த சமூகத்தினரின் நிதிப்பங்களிப்புடன் 40 இலட்சத்தில் தயாரான திருமஞ்ச வெள்ளோட்டமும் அன்று நடைபெற்றது.

இதற்கிடையில், அங்குள்ள இரண்டு சமூகத்தினருக்கிடையில் முரண்பாடு இருந்து வருகிறது. இது ஆலய திருவிழாவிலும் எதிரொலித்தது. ஆடம்பர திருமஞ்சத்திற்கு மற்ற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், திருமஞ்ச பவனியும் சர்ச்சைக்குரியதாக இருந்தது.

இதனையடுத்து, அந்த பகுதியினர் மானிப்பாய் பொலிஸ்நிலையத்திற்கு போய், அங்கிருந்த நான்கு பொலிசாரை தமது வாகனத்தில் அழைத்து வந்து பாதுகாப்பு கடமைக்கு நிறுத்தி, வெள்ளோட்டத்தை முடித்து விட்டனர்.

இந்த செயல் அந்த பகுதி இளைஞர்களை கொந்தளிக்க வைத்து விட்டது. ஆலயத்திற்குள் பொலிஸ்காரர்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சர்ச்சை முற்றி வெடித்ததால் இரண்டு பகுதியினரும் கோதாவில் குதித்தனர். இதனால் ஆலயத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேளக்கச்சேரி, ஆலய பூசைகள் நிறுத்தப்பட்டது. இரண்டு மணித்தியாலங்களிற்கு மேலாக நீடித்த சர்ச்சை அந்த பகுதி பெரியவர்களால் தணிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment