June 2, 2015

ஏ9 வீதி பழைய முறிகண்டி கோர விபத்தில் எட்டுப்பேர் பலியாகியுள்ளனர் (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிழவன்குளம் ஏ9 வீதியில் இன்று அதிகாலை 8மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன், 15 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாகபொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற பேருந்து வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரிப்பர் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த பயணிகள் நால்வர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், சாரதி அடங்கலாக 15 பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
murukandu_01
murukandu_02
murukandu_03


No comments:

Post a Comment