June 14, 2015

20ம் திருத்தச் சட்டம் குறித்து சிறுபான்மை கட்சிகள் மீண்டும் சந்திப்பு

20ம் தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பாக சிறுபான்மை கட்சிகள் மீண்டும் இன்றையதினம் ஒன்றுகூடி கலந்துரையாடவுள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்
முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட பல கட்சிகள் இதில் இணைந்துக் கொள்ளவுள்ளன.

20ம் திருத்தச் சட்டத்தில் கடந்த திங்கட் கிழமை சமர்ப்பிக்கட்ட சட்ட மூலத்தை காட்டிலும், வியாழக்கிழமை முன்வைக்கப்பட்ட சட்ட மூலத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

இது ஓரளவுக்கு சிறுபான்மை மக்களின் பிரதிநித்துவத்தை பாதுகாக்கும் எனினும், பாதிப்புகளும் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இரட்டை வாக்குச்சீட்டு முறைமையை அமுலாக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து இன்றையதினம் அந்த கட்சிகளுக்கு இடையில் பேசப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment