யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்பவங்களை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அரசியல் மீள் வருகைக்காக பயன்படுத்த
முனைவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இந்த
குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
தனது ஆட்சிக்காலத்தின் போது பெண்கள் துன்புறுத்தப்பட்டவேளை நடவடிக்கைகள் எதனையும் எடுக்காததற்காக முன்னாள் ஜனாதிபதி இந்த நாட்டின் அனைத்து பெண்களிடமும் மன்னிப்பை கோரவேண்டும். மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தால்,நாட்டின் ஓவ்வொரு கிராமமும் பாலியல் வன்முறைகளை சந்தித்திருக்கும்.
யாழ்ப்பாணத்தில் மாணவி ஓருவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் அரசாங்கம் தனது கண்டனத்தை தெரிவி;க்கவில்லை.
முன்னைய அரசாங்கத்தின் கீழ் யுவதிகளை பாலியல் வன்முறைக்குட்படுத்திய பின்னர் பிரதேச சபை உறுப்பினர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. ஆனால் அரசாங்கம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.
இவ்வாறான சம்பவங்களிற்கு முன்னைய அரசாங்கத்தின் கீழ் மக்கள் வீதியில் இறங்கியிருந்தால் அவர்கள் அடக்குமுறையை சந்தித்திருப்பார்கள். முன்னைய அரசாங்கம் நாட்டில் சட்டமொழுங்கை பாதுகாக்க தவறியதுடன் பெண்களையும் பாதுகாக்க தவறியது.
நாட்டிற்குள் போதைப்பொருளை கொண்டுவர அனுமதித்த பௌத்தர் யார்?கண்டி பெரஹெரவின் போது அங்கு இரவு நேர கார்பந்தயங்களை நடத்துவதற்கு அனுமதித்த பௌத்தர் யார்?
அதிகாரம், சலுகைகள், ஊழல் பணம் போன்றவற்றை இழந்த முன்னைய ஆட்சியாளர்கள் தற்போது எதிர்ப்புரட்சி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.என பிரதமர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment