ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ உள்பட எட்டு சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2012 -ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலி துறைமுகத்தில் எவன்கார்ட் எனும் தனியார் நிறுவனத்துக்கு ஆயுத களஞ்சியமொன்றை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 14 பில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி கோத்தபய ராஜபக்ஷ உள்பட 8 சந்தேக நபர்களுக்கு எதிராக ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது கருத்து தெரிவித்த ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், குற்றப்பத்திரிக்கை கையளிப்பதற்கு சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோத்தபய ராஜபக்ஷ உள்பட எட்டு சந்தேக நபர்களும் எதிர்வரும்30-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்தார்.
சொமத்திளக்க திசாயானக்க , ஜெயநாத் கொலம்பகே , ஜயந்த பெரேரா ஆகிய முன்னாள் கடற்படை தளபதிகளின் பெயர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment