தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
நடராஜா ரவிராஜ் யாரின் தேவைக்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து
விசாரணைப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க
தெரிவித்துள்ளார்.
ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையை தாமே செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும் இந்தக் கொலையின் பின்னணியில் யார் செயற்பட்டார்கள். யார் இதனை திட்டமிட்டது என்பது பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கொலை செய்யுமாறு பணித்தவர்களை கண்டு பிடித்தால், லசந்த படுகொலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய படுகொலைச் சமபவங்களின் பின்னணி பற்றிய தகவல்களை வெளியிட முடியும் என ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment