யாழ்.மாநகர சபை மைதானத்தில் காலை 10.15
மணியளவில் உலங்கு வானூர்த்தி மூலம் வந்திறங்கின ஜனாதிபதியை வடமாகாண
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெற்றிலை கொடுத்து வரவேற்றார்.
அங்கிருந்து யாழ்.வேம்படி மகளீர் கல்லூரிக்கு சென்று யாழ்.பாடசாலை
மாணவ மாணவிகளை சந்தித்தார். மாணவர்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றும் போது
புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு விஷேட
நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனை வழங்கப்படும்.என யாழில் மாணவர்கள்
மத்தியில் மைத்திரி உறுதி அளித்தார்.
அதவேளை ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி
மறுக்கப்பட்டு இருந்தது. ஜனாதிபதி ஊடக பிரிவுக்கு மட்டுமே அனுமதி
வழங்கப்பட்டு இருந்தது.
இருந்த போதிலும் மகளீர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது
தனிப்பட்ட செல்வாக்கினை பயன்படுத்தி யாழில் உள்ள தொலைக்காட்சி ஊடகவியலாளர்
ஒருவரையும் , யாழில் உள்ள இணையத்தள ஊடகவியலாளர் ஒருவரையும் ஜனாதிபதியின்
நிகழ்வுக்கு அழைத்து சென்று இருந்தார்.
No comments:
Post a Comment