தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின பேரணியும் பொதுக்கூட்டமும் இன்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறை கொட்டடி கடற்கரையில் ஆரம்பமாகி நடராஜா கலையரங்கில் நிறைவுபெறவுள்ளது.
கூட்டம் பி.பகல் 3.30 மணிக்கு காரைநகர் கணேச வித்தியாலய அதிபர் சிவகுரு இளங்கோ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
கொடியேற்றல் நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகும் குறித்த பேரணி, ஈகைச்சுடர் ஏற்றல், அகவணக்கம், வரவேற்புரை, தலைமையுரை, அதிதிகள் உரைகளுடன் இறுதியாக இசைநிகழ்ச்சியுடன் நிறைவுபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்புரையாற்றவுள்ளார்.தாயகம், சியம், சுயநிர்ணயம், அடிப்படையில் தமிழ்த் தேசியத்தின் அங்கீகாரத்தையும் தமிழ்த் தொழிலாளர்கள், தமிழ் விவசாயிகள், தமிழ் மீனவர்கள், தமிழ் அரசியல்கைதிகள் என்போரின் விடுதலையையும், காணாமல் போனோர் விவகாரம், மீள்குடியேற்ற விவகாரம் என்பவற்றையும் வென்றெடுக்க அனைவரும் அணிதிரள்வோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment