ஈழத்தில் ஐம்பத்து ஆறு கோழி முட்டைகளை குடித்து கிட்னஸ் சாதனை முயற்சியில் யாழ்ப்பாணம் இளவாலையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். இச்சாதனை முயற்சி இன்று காலை பதினொரு மணியளவில் இளவாலை கரும்பனை சனசமூக நிலையம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
அளவெட்டி வடக்கு திருவிழானை சேர்ந்த அப்புத்துரை ராசேந்திரம் [வயது-53] எனும் நான்கு பிள்ளைகளின் தந்தையாரே இவ்வாறு சாதனை முயற்சியில் ஈடுபட்டிருந்தார். நூற்று பத்து முட்டைகள் குடிக்கப்பட்டதே உலக சாதனையாக உள்ளது. இச்சாதனையை முறியடிக்கும் பரீட்சாத்த நடவடிக்கையாகவே இச்சாதனை முயற்சியினை அவர் மேற்கொண்டிருந்தார்.
காலை 11.10 மணியளவில் முட்டை குடிக்க ஆரம்பித்த அவர் காலை 11.13 மணி 14 வினாடிகளில் 56 கோழி முட்டைகளை குடித்து போட்டியை இடை நிறுத்திக் கொண்டார். இச்சாதனை முயற்சி தொடர்பில் ராசேந்திரம் தெரிவிக்கையில் பல நாள் பயிற்சியின் பின்னரே இச்சாதனை முயற்சியை மேற்கொண்டிருந்தேன்.
No comments:
Post a Comment