தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அலுவலகம் நேற்று திறக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளி இரவு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் தவபாலன் என்பவரை தொலைபேசி வழியாக தொடர்புகொண்ட சுவிஸ் ரன்சன் என்பவர் தான் புளொட் உறுப்பினர் என்றும் புளொட் பற்றிய விமர்சனங்களை வெளியிட்டால் உன்னை கொலைசெய்வேன் என்று மிரட்டியுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் வவுனியாவில் திறப்பதற்கும் தன்னால் தடைபோடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த காலங்களில் தமிழ் இதசிய விரோதச் செயற்பாடுகளில் சுவிசில் உள்ள சிறீலங்காத் தூதரகத்துடன் இணைந்து ஈடுபடுவதும், சிறீலங்காவின் தமிழினப்படுகொலையாளிகளோடு சோ்ந்தியங்குவதும் குறிப்பிடத்தக்கது.குறித்த சம்பவப் பின்னணியில் மேலும் தெரிய வருவதாவது,
வவுனியாவில் தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அலுவலகம் திறக்கப்படவுள்ளமை தொடர்பில் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் தகவல் பதிவுசெய்யப்பட்டிருந்தது. அது தொடர்பாக புளொட் துணைக் குழு உறுப்பினர்கள் அவதூறு தகவல்களை பதிவுசெய்து வந்திருந்தனர். அதற்கு தவபாலனும் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.
இதனையடுத்து குறித்த பதிவு தொடர்பில் தொலைபேசிய வழியாக தொடர்பை மேற்கொண்ட சுவிஸ்ரஞ்சன் அவதூறான வார்ததைகளை பயன்படுத்தி பேசியதுடன் கொலை அச்சுறுத்தலையும் தவபாலனுக்கு விடுத்துள்ளார்.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியாக புளொட் கட்சி இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment