April 12, 2015

புரட்சிகர வன்முறை அரசியலின் தேவை : திவ்வியன், அப்பன்,கோபி நினைவு நாளை முன்வைத்து ஒரு குறிப்பு.!


இன்றைக்கு ஒரு வருடங்களுக்கு முன்பு 3 போராளிகளின் வீரஞ்செறிந்த ஒரு வரலாற்று நகர்வு எதிரிகளினாலும் துரோகிகளின் காட்டிகொடுப்பினாலும் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டது. காட்டிக்கொடுப்புக்களுக்கும் துரோகங்களுக்கும் இந்த இனம் இன்னும் எத்தனை விலையை கொடுக்கப்போகிறதோ தெரியவில்லை.?


ஆனால் அவர்களது அர்ப்பணிப்பும் தியாகமும் வீரமும் செறிந்த அந்த நகர்வு மே 18 இற்கு பிறகான விடுதலைப்போராட்ட வரலாற்றில் முதல் வித்துக்களாக வரலாறு அதைப் பதிவு செய்கிறது.

இந்த நகர்வை இன்னும் விரித்து விளக்கம் செய்வது சிங்களத்தின் போலி விசம பரப்புரைக்கு நாமே இடம் கொடுத்ததாகிவிடும். எனவே வரலாறு மீதியை எழுதும் வரை காத்திருப்போம். தமிழ் மக்களுக்கும் சக பேராளிகளுக்கும் மட்டுமல்ல எதிரிகளுக்கும் அனைத்துலகத்திற்கும் அந்த 3 போராளிகளும் சொல்லிய செய்தி ஏராளம். இது எமது விடுதலைப்போராட்டத்தின் இன்னொரு பரிமாணத்தை உலகிற்கு துணிச்சலுடன் அறிமுகம் செய்ததென்றே கூற வேண்டும்.

மே 18 இற்கு பிறகு தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஓரளவேனும் முன்னோக்கி நகர்த்திய சக்திகள் என்று பார்த்தால் அது மாணவர்கள் (தமிழகம் மற்றும் தாயகம் ) மற்றும் சிறியளவிலேனும் தாயகத்தில் மக்கள் நடத்திய துணிச்சலான வீதிப் போராட்டங்களுடன் மிகவும் இக்கட்டான சூழலிலும் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி தமது பங்கை ஆற்றப் புகுந்த இந்த 3 போராளிகளுமேயாகும்.

இங்கு இந்த இடைப்பபட்டகாலத்தில் மெத்த படித்த மேதாவிகளோஇ வெள்ளைவேட்டி கட்டிஇ கோட்சூட் போட்ட அரசியல்வாதிகளோ எந்த ஆணியும் புடுங்கவில்லை.

சிங்கள அரசியல் யாப்புக்குட்பட்ட தேர்தல்களும், அது குறித்த உரையாடல்களும் அதை புறக்கணித்தல் ஆதரித்தல் என்ற அளவிலேயே தமது அரசியலை சுருக்கிக் கொண்டது இந்த கும்பல்.

அத்துடன் மே 18 இற்கு பிறகு திடீரென களம் புகுந்த இன்னொரு தரப்பால் முன்னெடுக்ப்பட்ட பக்கம் பக்கமாக கட்டுரைகள் ஆய்வுகள் குளிருட்டப்பட்ட அறைகளில் கருத்தரங்குகள் அனைத்துலக இராஜதந்திரிகளுடன் சந்திப்புக்கள் என்ற எந்த நகர்வும் போராட்டத்தை இம்மியளவும் நகர்த்தவில்லை. மாறாக போராட்டத்தை முடக்கின அல்லது பின்னோக்கி இழுத்தன என்று துணிந்து கூறலாம்.
thevian_appan_gopi

போராளிகளின் புரட்சிகர வன்முறைப்போராட்டமும் உழைக்கும் மக்களின் மாணவர்களின் புரட்சியுமே விடுதலையை சாதிக்கும் என்ற உலாகளாவிய தத்துவத்திற்கு தமிழர் தேசம் மட்டும் விலக்காக முடியுமா?
எனவே இந்த மூன்று சக்திகளையும் களம், புலம், தமிழகம் என்ற மூன்று தளங்களிலும் பலப்படுத்துவதுடன் இந்த சக்திகளுக்கு எதிராக இயங்குபர்களை நாம் இனங்கண்டு தமிழ்ச்சூழலிலிருந்து அகற்ற பின்நிற்கக் கூடாது என்பதே நாம் இவர்களின் நினைவு நாளில் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டிய செய்தியாகும்.

மே 18 இல் நாம் தோற்கடிக்கப்பட்ட முறைமையை வைத்து தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில; ஒரு பொது புத்தியாக ஆயுதப் போராட்டம் என்பது சாத்தியமற்றது என்ற கருத்து வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

இது சிங்களத்தின் சதி மட்டுமல்ல இனஅழிப்புக்கு துணைநின்று தமிழீழ விடுதலைக்கு எதிராக இயங்கும் மேற்குலக மற்றும் பிராந்திய சதிகளின் ஒரு பகுதியுமாகும். ஆயுதம் தரித்த மக்கள் திரள் போராட்டம், பேராளிகளின் புரட்சிகர வன்முறை போராட்டம் என்ற கோட்பாடுகள் என்பவற்றை நாம் தட்டையாக புரிந்து கொண்டதன் விளைவே நாம் ஆயுத போராட்டத்தில் முழுமையாக நம்பிக்கை இழந்ததும் அது குறித்து பேசுவதே குற்றம் என்ற பொதுப ;புத்திக்குள் நாம் எம்மை புதைத்துக்கொண்டதுமாகும்.

இதற்கு நாம் நம்மை நோகமுடியாதுதான். இனஅழிப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டதன் பிற்பாடு சிங்கள – பிராந்திய -மேற்குலக சக்திகள் நம்மீது நடத்திக்கொண்டிருக்கும் உளவியல் யுத்தத்தின் ஒரு பகுதியின் வெளிப்பாடாகவே நாம் இந்தகைய மனநிலைக்குள் வந்து சேர்ந்திருக்கிறோம்.

நாம் இந்த உளவியலை விட்டு வெளியேறிவிடக்கூடாது என்பதற்காகவே தொடர்ந்து நமது அழிவுகளும் அதன் விளைவான அவலங்களும் நமது வாழ்வியல் நெறியாக திட்டமிட்டு இந்த சக்திகளால் மாற்றப்பட்டிருக்கிறது. மே 18 இற்கு பிறகு தமிழ்த்தரப்பிலிருந்து திடீரென்று அரசியல் செய்ய புகுந்த மேட்டுக்குடி கனவான் அரசியல் செய்யும் ஒரு கும்பலும் பதவிக் கதிரைகளுக்காக தமது நிறங்களை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகளும் இந்த மக்கள் உளவியலை தெரிந்தோ தெரியாமலோ பேணத் தலைப்பட்டுள்ளார்கள்.

நாம் ஆயுதங்களை மவுனித்த பிற்பாடுதான் தமிழன அழிப்பு மிக வேகமாக நடைபெறுவதை கண்கூடாக காண்பதுடன் அதற்கு பலியுமாகிக் கொண்டிருக்கிறோம். ஒரு போராடிய இனம் போராடாமல் தனது பாதுகாப்புக்கு கவசமாக இருந்த ஆயுதங்களை கீழே போட்டவுடன் அதன் போராட்டம் என்பது கொள்கையளவில் முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது அரசியல்வாதிகளாலும் மேட்டுக்கு கனவான் அரசியல் செய்யும் படித்த மேதாவிகளாலும் நடநத்தப்படம் அறிக்கைப் போர்களுக்கும், தேர்தல் அரசியலுக்கும் பெயர் போராட்டம் அல்ல. அது நமக்கு நாமே தோண்டும் புதை குழிகள்.

சிறியளவில் மக்களும் மாணவர்களும் நடத்திய – நடத்தி கொண்டிருக்கும் எதிர்ப்பு அரசியலே போராட்டம் என்ற வகைக்குள் வருகிறது.

இந்த இடத்தில்தான் தாயக களம் தொடர்பான தெளிவான புரிதலுடன், தொடரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை தடுத்து நிறுத்த ஒரு போராடிய இயக்கமாக -அதன் பிரதிநிதிகளாக மேற்படி 3 பேராளிகளும் மக்கள் – மாணவர்களின் சிறியளவிலான எதிர்ப்பு அரசியலை ஒரு மக்கள் போராட்டமாக திரள செய்து அதற்கு ஒரு கவமாக இருக்க களம் புகுகிறார்கள். ஆனால் துரோகம் அவர்களை முளையிலேயே கருக்கிவிட்டது.

ஆனாலும் மே 18 இற்கு பிறகான எதிர்ப்பு அரசியல் மீதான நம்பிக்கையின் விதையாக – முன்னோடிகளாக நம்முன் கிடக்கிறார்கள் இம் மாவீரர்கள்.

தமிழீழத்தின் புவியியல் அமைப்பை பொறுத்தவரை ஒரு மரபுவழி இராணுவமாக எம்மை கட்டியெழுப்பி எதிர்ப்பு அரசியல் செய்வதென்பது சாத்தியமற்ற ஒன்று. மே 18 இற்கு பிறகான எமது பின்னடைவுக்கு பிறகு அது கனவில்கூட சாத்தியமேயில்லை. ஆனால் சீனப்புரட்சியின்போதும் அதற்கு பின்னான பல உலக போராட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்ட “தற்காப்பு மக்கள் யுத்தம்” என்ற அரசியல் இராணுவ தந்திரோபாயத்தை நாம் கட்டியெழுப்பியேயாக வேண்டும்.

இங்கு ஆயுதப் போராட்டம் ஏன் தேவையான ஒன்று என்பதை மக்கள் சார்ந்த நோக்கிலிருந்தே நோக்க வேண்டும். மக்கள் போராடுவதும் அவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதும், அது ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டமாக பரிணாமம் பெறுவதும் போராட்டம் ஒன்றின் இயல்பான வளார்ச்சிப்போக்காகும்.

அதன் விளைவாக உருவாகும் அரசியல் தலைமை ஒன்று தவிர்க்க முடியாத வரலாற்று நிகழ்ச்சிப் போக்காகும். எனவே மக்கள் போராட்டத்திற்கு எதிரான உள்ளக – வெளியக சக்திகளின் குரலே ஆயுதப் போராட்டம் சாத்தியமற்றது என்று ஒலிக்கின்றது. எனவே மக்கள் சிந்திக்க வேண்டும்.

தொடரும் இனஅழிப்புக்கு எதிரான கவசமாக மட்டுமல்ல, பிராந்திய மேற்குலக சதிகளை தடுத்து நிறுத்தவும் புரட்சிகர வன்முறை அரசியலின் ஒரு பகுதி குறித்து சிந்திக்கவும் உரையாடவும் அதற்கான பின்தளத்தை கட்டியமைக்கவும் தமிழத்தரப்பு சிந்திக்க விதைபோட்ட இந்த மாவீரர்களுக்கு நாம் அஞ்சிலி செலுததும் இந்த வேளையில் அவர்களின் புரட்சிகர அரசியலை முன்னெடுக்க நாம் உறுதியும் எடுப்போம்.

No comments:

Post a Comment