உறுதியளிக்கப்பட்டது 1100 ஏக்கரெனினும் விடுவிக்கப்பட்டது வெறும் 20 விழுக்காடு கூட இல்லையென்பது அம்பலமாகியுள்ளது. கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட 1000 ஏக்கர் காணிகளில் 20 சதவீதமான குடியிருப்புக் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தையிட்டி தெற்கு (ஜெ - 250 கிராம அலுவலர்) பிரிவில் 271 ஏக்கர் காணியில் 17 ஏக்கர் காணிகளே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. வறுத்தலைவிளான் (ஜே - 241 கிராம அலுவலர்) பகுதியின் 222 ஏக்கரில் 118 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், 49 ஏக்கர் குடியிருப்புக் காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளன.
இந்த 49 ஏக்கரில் வசித்த சுமார் 100 குடும்பங்கள், இன்னமும் உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள நலன்புரி முகாமில் வசித்து வருகின்றனர். கட்டுவன் (ஜே - 238 கிராம அலுவலர்) பிரிவிலுள்ள 247 ஏக்கர் காணியில் 10 ஏக்கர் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளன. தையிட்டி தெற்கு (ஜெ - 250 கிராம அலுவலர்), வீமன்காமம் தெற்கு (ஜே - 237 கிராமஅலுவலர்), பிரிவு காணிகளுக்கு சென்று வருவதற்கான பாதையை இராணுவத்தினர் முட்கம்பி வேலிகளால் அடைத்து வைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் புகையிரதக் கடவைக்கு அருகிலுள்ள சிறிய பாதையூடாக நடந்து செல்லவேண்டியுள்ளது.
வாகனத்தில் அந்த வழியூடாக செல்ல முடியாது. வறுத்தலைவிளான் (ஜே - 241 கிராம அலுவலர்) பகுதிக்குச் செல்லும் வீதியின் குறுக்கே இராணுவத்தினர் மண் அணை போட்டுள்ளமையால் பொதுமக்கள் அங்கு சென்று வருவதற்கு இயலாத நிலை காணப்படுகின்றது

No comments:
Post a Comment