யாழ்ப்பாணத்தின் முக்கிய சுற்றுலா மையங்களிலொன்றாக உருவெடுத்து வரும் சாட்டி கடற்கரையில் இளைஞர்கள். யுவதிகள் நடந்து கொள்ளும் விதம் அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும் விதமாக உள்ளது.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்
ஜோடிகட்டிக் கொண்டுவருபவர்கள், ஆபாசப்பட ஜோடிகளே வாய்பிளக்கும் விதத்தில் களியாட்டமிட்டுவிட்டு செல்வதை பார்த்து, இப்பொழுது சாதாரண மக்கள் அங்கு செல்வதை குறைத்து வருகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை சாட்டிக்கு சென்ற எமது செய்தியாளர் அனுப்பிய புகைப்படங்களும், வீடியோக்களும் பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைப்பவை. அதனை பிரசுரிக்க உகந்தவை அல்ல.
இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக பிரசுரிக்க தகுந்த சில புகைப்படங்களை பிரசுரித்துள்ளோம்.



No comments:
Post a Comment