குவைத்தில் இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது அனுசரணையாளரின் கைக்குழந்தையை தாக்கி உடலில் காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இந்த பெண்ணை குவைத் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குழந்தை தொடர்ந்தும் அழுது வந்ததுடன் ஏன் குழந்தை அழுகிறது என்பதை தேடிப்பார்க்குமாறு குழந்தையின் தந்தை தனது மனைவியிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து குழந்தையின் ஆடை அகற்றி விட்டு உடலை பார்த்த போது உடலில் நீல நிற தழும்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து குழந்தையின் தாய் பணிப்பெண்ணிடம் விசாரித்துள்ளார்.
இதன் பின்னர், குழந்தையின் தந்தை பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று பணிப்பெண்ணுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இலங்கை பெண்ணுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

No comments:
Post a Comment